கிறிஸ்துமஸ் தினத்தன்று பறந்து கொண்டிருந்த Qantas விமானம் இலக்கை அடையாமல் திரும்பியுள்ளது.
சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த QF63 தாங்கிய Airbus A380 விமானமே இவ்வாறு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை 10:00 மணிக்குப் பிறகு விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, விமானம் அன்று மாலை 3:00 மணியளவில் தென்னாப்பிரிக்க தலைநகரை வந்தடைய திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், அண்டார்டிகா மீது பறக்கும் போது அடையாளம் தெரியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இரவு 7.30 மணியளவில் சிட்னிக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தற்போது Qantas நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கடந்த 25 முதல் 26 வரை தேவையான வசதிகளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் விளக்கமளித்துள்ளார்.