விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.
தீ தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் மொய்ஸ்டன் மற்றும் பொமோனல் நகரங்களுக்கு அவசர எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயின் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடனடியாக வெளியேறி, அபாயகரமானதாக மாறுவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் காட்டுத் தீ மேலும் பரவும் என விக்டோரியா அவசரகால திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விக்டோரியா காட்டுத் தீயினால் சுமார் 40000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.