Sydney – Hobart போட்டியின் போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், இருவர் உயிரிழந்த போதிலும் போட்டி தொடரும் எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே இரவில் இருவர் உயிரிழந்த போதிலும் போட்டி தொடரும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
பந்தயத்தை நடத்தும் ஆஸ்திரேலியாவின் Cruising Yacht Club-ன் துணைத் தலைவர் டேவிட் ஜேக்கப்ஸ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆதரவு அளிக்கப்படுகிறது என்றார்.
55 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற கப்பல்கள் தொடர்பில் உரிய விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.