விக்டோரியாவில் உள்ள கிராம்பியன்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவியது.
இதன் காரணமாக அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமியப் பகுதியில் சுமார் 74,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுக்கடங்காத காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் குறைந்தபட்சம் ஒரு வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 74,000 ஹெக்டேர் நாசமாகியுள்ளது. இந்த சேதம் சிங்கப்பூரின் அளவிற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இந்த அபாயம் இன்னும் சில வாரங்களில் மேலும் பரவும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் கால்நடை வளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு குழுக்களுக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமியன்ஸ் தேசிய பூங்காவில் தற்போது சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.