தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 179 பேர் பலியாகினர்.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்களுடன் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு இரண்டு பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும், மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருவதாகவும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.