NewsWhatsapp-இல் அறிமுகமாகும் Chat-GPT

Whatsapp-இல் அறிமுகமாகும் Chat-GPT

-

Meta நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான Whatsapp இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் Whatsapp சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் Whatsapp செயலியில் Chat-GPT அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Open AI அறிமுகம் செய்துள்ளது. AI தொழில்நுட்பத்துடன் Chatting மூலம் மனிதர்கள் உரையாட Chat-GPT தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது Whatsapp செயலி மூலம் நேரடியாகவே Chat-GPT உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக Open AI தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த Chat-GPT Whatsapp-ல் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே Whatsapp-இல் Meta AI வசதி உள்ள நிலையில் இந்த Chat-GPT அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக Chat-GPT குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய Open AI முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி (26 வயது) அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

Latest news

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...