Cinemaமீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி

மீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி

-

2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரபாகரன் இயக்கியிருந்தார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சூரி, இனிகோ பிரபாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரன், கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களை இயக்கினார்.

அடுத்தது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார் பிரபாகரன்.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம் இயக்குனர் பிரபாகரன், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போக விஜய் சேதுபதி, பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இனிவரும் நாட்களில் விஜய் சேதுபதி, பிரபாகரன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

01.01.2025 அன்று பிறந்த குழந்தைகளுக்கான புதிய தலைமுறை

இந்த வருடத்தில் முதலாம் திகதி முதல் பிறக்கும் குழந்தைகள் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி 01.01.2025 நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு பிறக்கும்...

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...