NSW இல் Yamba அருகே இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காலை 11.20 மணியளவில் யம்பாவிலிருந்து 8 கிமீ மேற்கே உள்ள பால்மர்ஸ் தீவில் பொழுதுபோக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக அவசர சேவைகள் தெரிவித்தன.
இந்த விபத்தில் விமானத்தின் 60 வயது விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர், கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.