2025 ஆம் ஆண்டில், வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் செல்வது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Go overseas அறிக்கைகளின்படி, 2025 இல் வெளிநாட்டில் வேலை செய்ய மிகவும் பொருத்தமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடாக நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் நெதர்லாந்தும் இடம்பிடித்துள்ளன.
தரவரிசையில் மூன்றாவது இடத்தில் தென் கொரியா இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வேலை பாதுகாப்பு மற்றும் அதிக சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் பார்வையிட வேண்டிய நாடுகளில் ஆஸ்திரேலியா 4 வது இடத்தில் உள்ளது.
இங்கு கனடா ஒன்பதாவது இடத்தையும், ஜெர்மனி 5வது இடத்தையும் பெற்றுள்ளன.