உலகம் முழுவதும் மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் உயரமான கட்டடமான டுபாயின் Burj Khalifaவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தாண்டு ‘கவுண்ட் டவுன்’னை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
தொடர்ந்து 9 நிமிடங்களுக்கு நடைபெற்ற வாண வேடிக்கைகளின் வர்ண ஜாலங்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
மற்றொரு ஐக்கிய அரபு இராச்சிய நகரமான ராஸ் அல்கைமாவில், Drone Show மூலம் வானில் புத்தாண்டு ‘Count Down’ காட்சிப்படுத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடைபெற்றன.
உக்ரைனில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரஷ்ய உக்ரைன் போர் இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பெயர்பெற்ற சுதந்திர சதுக்கம், போரை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.