Ferrari கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள Watsons Bay மாளிகைக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வாகனத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற 50 வயதுடைய நபருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
NSW இலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளும் சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்குச் சென்றன.
இந்த Ferrari அதிவேகமாக வந்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி பின்னர் மண்டியா மீது மோதியதாக கூறப்படுகிறது.
அந்த இடத்திற்கு அதிகமானோர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.