அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே எரிபொருள் கேனிஸ்டர்கள் மற்றும் பட்டாசு மோட்டார்கள் நிரப்பப்பட்ட டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் இளைஞர்கள் ஆவர்.
இந்த டிரக் கொலராடோவில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, வெடிவிபத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நகருக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டிரம்பின் ஹோட்டலுக்கு முன்பாக கண்ணாடி கதவு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் புகைபிடிக்க ஆரம்பித்து பின்னர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பிடன், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றின் முன் இடம்பெற்ற எலோன் மஸ்க்கின் கார் வெடித்த சம்பவம் தொடர்பில் வெள்ளை மாளிகை அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.