அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடி சங்கிலிகள் அவுஸ்திரேலியா தினத்திற்கு தயாராகும் விதம் தொடர்பில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆஸ்திரேலியா தினத்தை குறிக்கும் அலங்காரங்கள் மற்றும் பொருட்கள் விற்பனைக்காக தங்கள் கடைகளில் காட்சிப்படுத்தப்படும் என Woolworths அறிவித்துள்ளது.
அதன் வாடிக்கையாளர்களில் அதிகமானோர் ஆஸ்திரேலியா தினத்தை கொண்டாட விரும்புவதை நிறுவனம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா தினம் நெருங்கும் போது, Woolworths தங்கள் கடைகளில் ஆஸ்திரேலியா தினத்தை குறிக்கும் பொருட்களை விற்க மாட்டோம் என்று அறிவித்தது.
அந்த முடிவால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், Woolworths கடைகளில் பொருட்களின் விற்பனை வேகமாக சரிந்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலியா தினத்துடன் இணைந்து, அவுஸ்திரேலியர்கள் அதிகம் விரும்பும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அந்நிறுவனம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.