அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நகரின் பிரபலமான சுற்றுலா தலமான போர்பன் தெருவில் உள்ளூர் நேரப்படி 03:15 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தின் மீது மோதிய வாகனத்தின் சாரதி வெளியே வந்து ஆயுதத்தால் சுடத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பொது பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், பதிலுக்கு போலீஸாரும் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அப்பகுதி பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.