சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருவதோடு இது கொவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த வைரஸானது 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் தாக்குவதாகக் கூறப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சீனாவில் உள்ள பல வைத்தியசாலைகள் இன்ஃப்ளூவன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.