அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய விமானம் மோதியதில் இருவர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்கள் விமானத்தில் இருந்தார்களா அல்லது தரையில் இருந்தார்களா என்பது இதுவரை தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த போது அந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
விமான நிலைய செயற்பாட்டு திணைக்களம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த நாட்களில் விமான விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது.