2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான வெப்பநிலை தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் விக்டோரியா மாகாணத்திற்கு மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இந்த நிலை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தையும் பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விக்டோரியா மற்றும் வடக்கு டாஸ்மேனியாவின் பெரும்பாலான பகுதிகளில் வார இறுதி நாட்களில் வெப்பம் தாக்கும் அபாயம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே வெப்பம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நியூ சவுத் வேல்ஸில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான வெப்ப அலை நிலைகள் இருக்கலாம்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அனல் காற்றின் நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ்-விக்டோரியா எல்லைப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.