Sportsஉலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

உலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

-

ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சம்பியன் Agnes Geletti காலமானார்.

103ஆவது வயதான இவர் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள வைத்தியசாலையில் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது.

பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் Geletti என இவர் மாற்றிக்கொண்டார்.

ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

அழித்தொழிப்பில் இருந்து தப்பிய Geletti போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துக்கொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ரோபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

Geletti ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் திகதி தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

சூப்பர் மார்கெட்டில் கீரை வாங்கிய ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே...

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் கலவரம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்த இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். Carlton மற்றும் Collingwood போட்டியின் போது நேற்று இரவு சுமார்...

2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மெல்பேர்ண் வீட்டு விலைகளின் நிலவரம்

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வீட்டு வாடகைகள் சாதனை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு வாடகைகள் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆண்டின் முதல்...