Newsவிண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

-

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாட்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாட்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சியாக, (CROPS) பி.எஸ்.எல்.வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் வி.எஸ்.எஸ்.சி துணைச் செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பி.எஸ்.எல்.வி-சி60 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் வி.எஸ்.எஸ்.சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது.

விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது

Latest news

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியான தலைமை ஆணையர் Mike Bush, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், டாஸ்மேனியாவில் ஆண்டுதோறும்...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

கான்பெராவில் மாற்றமடையும் Liquor Transport சட்டங்கள்

கான்பெராவில் வீடுகளுக்கு மதுபான விநியோகத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை ACT அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...