40 வருட கோடைகாலத்திற்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலியா மிக மோசமான வறட்சியை சந்தித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வெப்பநிலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பயிரிடப்படும் நிலத்திற்கு ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் விவசாயத் துறையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் பல இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட மழைவீழ்ச்சியே பதிவாகியிருந்த போதிலும், இதுவே பதிவான அதிகபட்ச வெப்பநிலை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறண்ட காலநிலையுடன் காட்டுத் தீ ஏற்படுவதற்கான அதிக ஆபத்து காரணமாக, தெற்கு ஆஸ்திரேலியர்கள் இந்த நாட்களில் தீ வைப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதன் காரணமாக உணவு உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.