வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின் விலை 8 டாலரில் இருந்து 12 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விலையை உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை என அப்பகுதி வணிகர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, பியரின் விலையும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என பியர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை மதுவரியை உயர்த்தி வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரி 2% முதல் 3% வரை அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு பைன்ட் பியரின் விலை சுமார் $15 ஆக இருக்கலாம் என்றும் பியர் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் Kristy McBain, இது வரிச் சட்டத்தின் இயல்பான செயற்பாடாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.