நேற்று விக்டோரியாவின் பல பகுதிகளில் தீத்தடுப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, மாநிலத்தின் தென்மேற்கு, வடமத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் விம்மேரா, மல்லி, மெல்பேர்ண், ஜீலாங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூரண தீத்தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்த பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகம் என கருதப்படுகிறது. இந்த தடை நேற்று இரவு 11.59 வரை நீடித்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காட்டுத் தீ ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி ஜேசன் ஹெஃபர்னான் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த கால அவகாசம் முடியும் வரை அந்த பகுதிகளில் திறந்த வெளியில் தீ வைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.