கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த நிதியாண்டில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு சுமார் 251 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிடும் தொகை 40% அதிகரித்துள்ளதாக நிதித்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2008 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கம் விளம்பரங்களுக்காக செலவழித்த இரண்டாவது பெரிய தொகை இதுவாகும்.
முன்னதாக, 2021-2022 நிதியாண்டில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம் விளம்பரங்களுக்காக 339 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை பல தரப்பினரும் விமர்சித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.