News217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

-

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டொலரில் 400 மில்லியன்) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (NACC) அந்நாட்டு பிரதமர் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவரது பியூ தாய் கட்சி உறுதி செய்துள்ளது. அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அதில், 11 பில்லியன் பாட் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் பாட்டை அவர் ரொக்கம் மற்றும் டெபாசிட்டாக வைத்துள்ளார்.

மேலும், 75 ஆடம்பர கைக்கடிகாரங்களின் மதிப்பு 162 மில்லியன் பாட். 217 டிசைனர் ஹேண்ட்பேக்குகளின் மதிப்பு 76 மில்லியன் பாட். இவைதவிர, லண்டன் மற்றும் ஜப்பானில் அவருக்கு சொத்துகள் உள்ளன.

ஷினவத்ராவுக்கு 05 பில்லியன் பாட் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் பாட் ஆகும். அமெரிக்க மதிப்பில் 258 மில்லியன் டொலராகும். இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தற்போதைய பிரதமர் பேடோங்டர்ன், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள் ஆவார். இவர், கடந்த செப்டெம்பரில் தாய்லாந்து பிரதமராக பொறுப்பேற்றார். தாய்லாந்தை இவரது குடும்பம் தான் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தை ஆளும் அந்த குடும்பத்தின் நான்காவது வாரிசுதான் பேடோங்டர்ன்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...