இந்த வாரம் விக்டோரியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Melbourne, Ballarat, Moe, Mallacoota, Omeo, Shepparton, Traralgon, Wangaratta, Albury-Wodonga மற்றும் Warragul ஆகிய நகரங்கள் அதிக வெப்பநிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த வார இறுதியில் Bendigo மற்றும் Tullamarine 40C ஐ எட்டும், அதே நேரத்தில் Shepparton 41C ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயோதிபர்கள், கைக்குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் குறிப்பாக ஆபத்தானவை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.