நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,
Dandenong-ல் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Dandenongல் உள்ள McCrae St.- இல் இந்த சடலம் உள்ளூர் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி தற்போது குற்றச் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல புலனாய்வுக் குழுக்கள் அந்த இடங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அல்லது சந்தேகத்திற்கிடமான CCTV காட்சிகள் இருந்தால், அந்தத் தகவலை விரைவில் விக்டோரியா காவல்துறைக்கு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.
Image courtesy: 7news.com