இங்கிலாந்திற்குள் பயணம் செய்ய விரும்பும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயணச் சட்டங்களே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறு மாத காலத்திற்கு இங்கிலாந்துக்கு வரும் ஆஸ்திரேலியர்கள் மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.
இதற்கு சுமார் 20 ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் UK ETA ஆப் அல்லது UK Home Office இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மின்னணு பயண அங்கீகாரத்திற்கான (ETA) விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து தேவையான பணம் செலுத்திய பிறகு மூன்று வேலை நாட்களுக்குள் மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் பெறப்படும்.
இந்த விண்ணப்ப செயல்முறைக்கு, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் விண்ணப்பதாரரின் முகத்தின் புகைப்படம் சேர்க்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், அவர்கள் பயணிக்கும் இடங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.