வேலை தேடும் விக்டோரியர்களுக்கு ஆதரவை வழங்க புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“Jobs Victoria” என்ற இந்த சேவையின் மூலம் விக்டோரியர்களுக்கு இலவச ஆதரவை வழங்குவதும் சிறப்பம்சமாகும்.
இதன் கீழ் செயல்படும் வேலை மற்றும் கற்றல் மையங்கள் மூலம், பணியிடங்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் பணி அனுபவம் ஆகியவை பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Jobs Victoria” சேவையின் வலையமைப்பின் அடிப்படையில், வேலை தேடும் விக்டோரியர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதற்காக வேலைவாய்ப்புக்கான இடங்களைக் கண்டறியும் பணியும் செய்யப்படுகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான ஆலோசனைச் சேவையும் இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சேவை தொடர்பான கூடுதல் தகவல்களை விக்டோரியா மாநில இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.