Meta நிறுவனம் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட Fact – Checking திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், Meta நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Mark Zuckerberg அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு பதிலாக, X போன்ற சமூக ஊடக நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் சமூகம் சார்ந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதே நிறுவனத்தின் எதிர்காலத் திட்டமாகும்.
2016 ஆம் ஆண்டில், Meta நிறுவனம் Fact – Checking திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சமூக வலைதளங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பியதே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள Facebook, Instagram மற்றும் Threads பயனர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.