இந்த ஆண்டு, உலகின் சிறந்த கடற்கரைகளை Lonely Planet எனும் நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2025-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள Whitehaven கடற்கரை உலகின் சிறந்த கடற்கரையாக மாறியுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.
இந்த தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் Squeaky கடற்கரை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் உள்ள இந்த அழகிய கடற்கரையை பார்க்க பலர் விரும்புவதாக கூறப்படுகிறது.
சீஷெல்ஸில் உள்ள Anse Source d’Argent கடற்கரை மூன்றாவது இடத்திலும், தாய்லாந்தின் Sunset Beach நான்காவது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையில், உலகின் சிறந்த கடற்கரைகளில் ஐந்தாவது இடம் கிரேக்கத்தின் சரகினிகோ கடற்கரைக்கு சொந்தமானது.