Newsஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு - ஒரு மகனுக்கு தாய்,...

ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு – ஒரு மகனுக்கு தாய், இன்னொரு மகனுக்கு தந்தை

-

தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு, 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.

இருப்பினும், லியுவின் உடல் விரைவில் விவரிக்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் திடீர் எழுச்சி தாடியின் வளர்ச்சிக்கும், மார்பக அளவு குறைவதற்கும், ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பிறகு, லியு தனது மகனை தனது தந்தையுடன் விட்டுவிட்டு புதிதாகத் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த லியு, அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேல் பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்தார்.

இந்தச் சமயத்தில்தான் லியு, ஜோ [zhou] என்ற பெண் சக ஊழியரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில், லியு தனது தனிப்பட்ட உடல் நிலை காரணமாக ஜோவை காதலிக்க தயங்கினார். இருப்பினும், ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.

லியுவின் நிலைமையால் சவால்கள் இருந்தபோதிலும், ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்கள் திருமணம் தடைப்பட்டது. சீனாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாததால், சட்டப்படி இருவரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லி வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.

பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லியு வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.

இதன் விளைவாக, டாங் மற்றும் ஜோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் லியுவும் ஜோவும் தொடர்ந்து ஜோடியாக வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 59 வயதான லியு தாயாகவும், தந்தையாகவும் ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லியுவின் கதை சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...