NewsUK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

UK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

-

United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறை தொடர்பில் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் அறியாமையே இணையக் குற்றவாளிகளால் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக cyber crime நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுமதிகளை விற்பனை செய்யும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற போலி இணையத்தளங்களை சட்ட அமலாக்க முகவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமிற்குப் பயணிக்கத் தேவைப்படும் இந்த அனுமதியை UK ETA app அல்லது யுனைடெட் கிங்டமின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.

உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் நிபுணர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

மொபைல் போனில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான ஒரு வழி

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் மட்டுமே தங்கள் மொபைல் போனிலிருந்து...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...