Newsகொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க ஆஸ்திரேலியாவிடம் புதிய திட்டம்

கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க ஆஸ்திரேலியாவிடம் புதிய திட்டம்

-

கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான புதிய திட்டத்தை முயற்சிக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு திட்டமிட்டுள்ளது.

அதாவது மரபணு மாற்றப்பட்ட கொசு வகையை சுற்றுச்சூழலுக்கு விடுவதாக கூறப்படுகிறது.

“Oxitec Australia” என்றழைக்கப்படும் இந்த வேலைத்திட்டம் Commonwealth Scientific and Industrial Organisation (CSIRO) மற்றும் பிரிட்டிஷ் நிறுவனமான Oxitec ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கொசு இனங்களால் அச்சுறுத்தப்படும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சில பகுதிகளில் மரபணு மாற்றங்களுக்கு உள்ளான இந்த புதிய வகை கொசுவை அறிமுகப்படுத்துவதே தொடர்புடைய திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

எவ்வாறாயினும், Gene Technology Regulator அலுவலகத்தில் முறையான அனுமதி கிடைக்கும் வரை இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தொடங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த முறை வெற்றி பெற்றால், உலகம் முழுவதும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...