தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவாண்டாஸ் விமானம் ஒன்று நேற்று காலை பெர்த்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
QF1613 என்ற பெயருடைய விமானம் இவ்வாறு தரையிறங்கியுள்ளது. அப்போது விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை உறுதி செய்த விமானக் குழுவினர், வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
இச்சம்பவத்தால் அசௌகரியங்களுக்கு உள்ளான பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த விமானம் விரைவில் முன்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன் மற்றும் பயணிகளின் புரிதலுக்கு நன்றியும் தெரிவித்தது.