தினமும் காலையில் காபி குடித்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது, காலையில் காபி குடிப்பதால் ஒருவரின் இதய ஆரோக்கியம் மேம்படும் என அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் காலையில் காபி குடிப்பவர்களுக்கு இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 40,000க்கும் மேற்பட்ட பெரியவர்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தியதில், காலையில் காபி குடிப்பவர்கள் காபி குடிக்காதவர்களை விட நீண்ட காலம் வாழ்வது தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் நடாலி ரஃபுல் கூறுகையில், ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காபி குடிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, Caffeine அளவைப் பற்றி மருத்துவ பரிந்துரைகளைப் பெற வேண்டும்.
இருப்பினும், காபி உட்கொள்ளும் நேரம் இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் காபி அருந்துவதற்கு முன் தங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.