கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வத்திக்கானில் 9ம் திகதி நடந்தது. போப் ஆண்டவரின் உரையைக் கேட்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வந்திருந்தனர். அவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது உரையை தொடங்கினார்.
ஆனால் உரையின் சில வரிகளை மட்டுமே வாசித்த போப் ஆண்டவர், தான் சளியால் அவதிப்படுவதாகவும் எனவே தனது உரையை உதவியாளர் வாசிப்பார் என்றும் தெரிவித்தார்.
அதன்படி போப் ஆண்டவரின் நீண்ட உரையை அவரது உதவியாளர் வாசித்தார். 88 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக வயோதிபம் தொடர்பான பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.