மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் வயோதிபப் பெண்களை பின்தொடர்ந்து ‘ஆவிகள்’ வருவதாகவும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பணம், நகைகள் அடங்கிய பையை வைத்து பூஜை செய்தால் ஆவியிடம் இருந்து விடுபடலாம் என்று கூறி முதியவர்களின் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவரிடம் விசாரணை செய்தபோது, அந்த கும்பல் சிறிது நேரம் பையை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு பையில் இருக்கும் தங்களுடைய பெறுமதியான பொருட்களை திருடுவதாக கூறினார்.
இந்தக் கும்பலிடம் 1,50,000 டாலர்களுக்கு மேல் ரொக்கம் மற்றும் நகைகளை மக்கள் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.