கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் ‘முதலை மண்டை ஓடு’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தியத் தலைநகரில் இருந்து கனடாவுக்குச் செல்லும் வழியில் விமான நிலையத்தில் (DEL) பாதுகாப்புச் சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலை மண்டை ஓடு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
இதன்படி, குறித்த கனேடியர் வனவிலங்கு சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தை மீறியுள்ளதாக இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி சுங்கத்துறை, ஆய்வக சோதனைகளுக்காக மண்டை ஓடு ‘வனம் மற்றும் வனவிலங்கு துறையிடம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
வனவிலங்கு வர்த்தகத்தை கண்காணிக்கும் ஒரு NGO TRAFFIC ஆல் 2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கை, இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ந்து வரும் அதே வேளையில், இந்தியா தலைமையிலான பிராந்தியம் முழுவதும் “வனவிலங்கு கடத்தலுக்கான விமான நிலையங்களை தவறாகப் பயன்படுத்துகிறது” என்பதை வெளிப்படுத்தியது.