பல்வேறு Subscription சேவைகளில் கையெழுத்திட்டதன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் நிதி நெருக்கடிக்கு பலியாகி இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
79% ஆஸ்திரேலியர்கள் குறைந்தது ஒரு Subscription சேவையில் கையெழுத்திட்டுள்ளனர் என்று Finder தரவு வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் Streaming சேவைகளுக்கு மட்டும் சுமார் $540 செலவழிக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது.
Ad-free option சேவையுடன் இசை மற்றும் விளையாட்டு தொடர்பான சந்தாக்கள் வருடத்திற்கு சுமார் 1700 டாலர்கள் செலவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், சில Subscription சேவைகளின் மாதாந்திர கட்டணம் $5 அல்லது $6 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், அவுஸ்திரேலிய குடும்பங்களின் செலவுகளில் கணிசமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக Finder இன் நிதி நிபுணர் Rebecca Pike மேலும் குறிப்பிட்டுள்ளார்.