அண்டார்டிகாவில் பணிபுரியும் ஆஸ்திரேலியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் “Australian Antarctic Program” மூலம் வேலை வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் வெற்றிடங்களுக்கு ஆஸ்திரேலியர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதன்படி, தச்சர்கள், சமையல்காரர்கள், விநியோக அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு அவுஸ்திரேலியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.
ஆட்சேர்ப்பு செய்யப்படும் தொழில்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களின் காலம் 06 மாதங்கள் முதல் 15 மாதங்களுக்கும் மேலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australian Antarctic Program-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம்.