விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் ஷேன் பாட்டனுக்கு செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
இது மாநில காவல்துறையில் பணிபுரியும் 16,000 காவல்துறை அதிகாரிகளுக்கும் பொருந்துவதாக கூறப்படுகிறது.
இந்த மின்னஞ்சல் செய்தி ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.
நீண்ட நாட்களாக நிலவி வரும் ஊதிய முரண்பாடுகளுக்கு இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் தலைமை ஆணையருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்து பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்னஞ்சல் செய்திக்கு பெருமளவான விக்டோரியா பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து பதில்கள் கிடைத்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.