Melbourneவரும் நாட்களில் மெல்பேர்ணில் நடக்கவிருக்கும் இலவச திருவிழாக்கள்

வரும் நாட்களில் மெல்பேர்ணில் நடக்கவிருக்கும் இலவச திருவிழாக்கள்

-

வரும் நாட்களில், மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் இலவசமாக பங்கேற்கும் விழாக்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த தகவலை Melbourne.Victoria இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மெல்பேர்ணில் ஜனவரி 19ஆம் திகதி தொடங்கும் Midsumma விழாவில் இலவசமாகவும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள National Sustainability விழாவில் இலவசமாக பங்கேற்க மெல்பேர்ன் வாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 02 ஆம் திகதி நடைபெறவுள்ள மெல்பேர்ண் சீன சந்திர புத்தாண்டு விழா மற்றும் பெப்ரவரி 09 ஆம் திகதி Fed Square-இல் நடைபெறும் Luna New Year விழாவும் அந்த நிகழ்வுகளில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள Afro – Caribbean Carnival மற்றும் மார்ச் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நேபாள திருவிழாவில் மெல்பேர்ண் மக்கள் இலவசமாக பங்குபற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...