சிட்னி ரயில் சேவையில் பல பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில் 15ஆம் திகதி காலை மட்டும் சிட்னி ரயில் சேவைகளில் 80% ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுக்கும், ரயில், டிராம் மற்றும் பஸ் யூனியனுக்கும் (RTBU) இடையே உள்ள ஊதிய முரண்பாடுதான் இதற்குக் காரணம் ஆகும்.
4 ஆண்டுகளில் தங்களின் சம்பளத்தை 32% உயர்த்த வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக சிட்னியில் வெள்ளிக்கிழமை வரை ரயில் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
எவ்வாறாயினும், இந்த நிலைமை காரணமாக பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.