பாலியில் மெல்பேர்ண் பெண் ஒருவர் உயிரிழந்ததை வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) உறுதிப்படுத்தியுள்ளது.
DJ தொழிலில் மிகவும் பிரபலமான பெண்ணான கோர்ட்னி மில்ஸ் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
37 வயதான கோர்ட்னி மில்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை பாலி ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக கோர்ட்னி மில்ஸின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இறப்புக்கான காரணத்தை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. விபத்து நடந்த போது மில்ஸின் தாயும் அவரது சகோதரியும் உடனிருந்தனர்.
இருப்பினும், அன்றைய தினம் மில்ஸ் மது அருந்தியிருந்ததாகவும், ஊழியர்கள் குழு ஒன்று அவளை நள்ளிரவில் அவரது அறைக்கு அழைத்து வந்து பூட்டைத் திறந்ததாகவும் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் ஹோட்டலின் குளத்தில் சரிந்த நிலையில் காணப்பட்டார் என்று ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.