Newsகூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அமைச்சரவையில் மாற்றம்

கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அமைச்சரவையில் மாற்றம்

-

அடுத்த கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, தனது அமைச்சரவையில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்யவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

NDIS அமைச்சர் மற்றும் பொது சேவை அமைச்சராக பதவி வகித்த பில் ஷார்ட்டன் அடுத்த வாரம் மத்திய பாராளுமன்றத்தில் இருந்து விலகுவார் என்ற அறிவிப்பை தொடர்ந்து இது வெளியாகியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வின் பின்னர் இந்த மாற்றங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது சமூக சேவைகள் அமைச்சராக பதவி வகிக்கும் அமண்டா ரிஷ்வொர்த்துக்கு NIDS அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

தற்போது நிதியமைச்சராக கடமையாற்றி வரும் Katy Gallagher-இற்கு எதிர்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய ஊனமுற்றோர் காப்புறுதித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும்
பொறுப்பு இளைஞர் அமைச்சர் (Youth Minister) Anne Aly-இற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்த அமைச்சர்கள் தற்போது வகிக்கும் அமைச்சுக்களுக்கு மேலதிகமாக புதிய பதவிகளில் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...