Smart watch மற்றும் Fitness Tracker Bands-களில் தோலின் மூலம் உறிஞ்சப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த PFAS இரசாயனங்கள் இருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு குழு ஒன்று செய்துள்ளது.
PFAS அல்லது இரசாயனங்களின் அறிகுறிகளுக்காக 22 பொதுவான பிராண்டுகளை ஆய்வு சோதித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பொருட்களில், 15 பொருட்கள் பொதுவாக நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆடைகளில் காணப்படும் PFAS அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
PFAS என்பது சுமார் 15,000 சேர்மங்களின் தொகுப்பாகும். இது பொதுவாக நீர் மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.
இந்த சேர்மங்களை உடலில் உறிஞ்சுவது புற்றுநோய், சிறுநீரக நோய், கல்லீரல் பிரச்சினைகள், நோயெதிர்ப்பு குறைபாடுகள், பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது .
சோதனை செய்யப்பட்ட Smart watch பிராண்டுகளில் Nike, Apple, Fitbit மற்றும் Google ஆகியவை ஆய்வுக்கு பயன்படுத்தப்படவில்லை.