விக்டோரியா மாநில அரசு எரிபொருள் விலை உயர்வுக்கான வரம்பை அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தொழிற்கட்சியின் “Fair Fuel Plan”-ஐ 20ம் திகதி விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் அறிவித்துள்ளார்.
இந்த முறையின் மூலம் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் 24 மணித்தியாலங்கள் வரை விலையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளாந்தம் சுமார் 1500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலைகள் வெளியிடப்படும்.
மெல்பேர்ண் ஓட்டுநர்கள் மலிவான பெட்ரோல் நிலையங்களில் நிரப்புவதன் மூலம் ஆண்டுக்கு $333 சேமிக்க முடியும் என்று மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் எடுத்துரைத்தார்.
இதன் மூலம் விக்டோரியா மாநில சாரதிகளுக்கு பல வசதிகள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.