பாதுகாப்பு விசாவிற்கு (Subclass 866) விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை வழங்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது .
உங்களுக்கான பாதுகாப்பு விசாவை வேறு யாரேனும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலும், உங்கள் விண்ணப்பத்தில் உள்ள அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள், என்ன தகவல் வழங்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்கள் சார்பாக பாதுகாப்பு விசாவிற்கு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று உள்துறை அலுவலகம் கூறுகிறது.
பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் மாநிலம் அல்லது பிரதேசத்தில் இலவச தகவல்களை வழங்கும் குடிவரவு சட்ட அதிகாரியிடம் பேசி சரியான ஆலோசனையைப் பெறுங்கள் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விசா (Subclass 866) தொடர்பாக ஆஸ்திரேலியாவில் மோசடி செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது .
சில சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகள் இரண்டையும் சந்திக்க நேரிடும்.
பாதுகாப்பு வீசா தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் புலம்பெயர்ந்தோர் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத்திரமே இந்த விசா வழங்கப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் மீண்டும் தெரிவித்துள்ளது.