Newsஆஸ்திரேலியா தினத்தன்று மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கான இலவச நிகழ்வுகள்

ஆஸ்திரேலியா தினத்தன்று மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கான இலவச நிகழ்வுகள்

-

ஆஸ்திரேலியா தினத்தன்று (Australia Day), மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் இலவசமாக பங்கேற்கக்கூடிய சிறப்பு நிகழ்வுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விக்டோரியா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 26 ஆம் திகதி மெல்பேர்ண் நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள “Australia Day Flag Raising Ceremony” இல் மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.

அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் Federation Squareல் நடைபெறும் Australia Day கொண்டாட்டங்களில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையைக் கேட்டுக்கொண்டே சுவையான உணவு மற்றும் பானங்களை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், குடிமக்கள் ஆஸ்திரேலியா தினத்தன்று “Government House Open Day” இலவசமாக சேரலாம்.

அன்றைய தினம் “21 – Gun Salute at the Shrine of Rememberance” நிகழ்வில் எவ்வித கட்டணமும் இன்றி பங்குபற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...