மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி பயணித்த போது வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை 3.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மெல்பேர்ண் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது காட்சிகளை வைத்திருப்பவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் விக்டோரியா வீதியில் இடம்பெற்ற 17ஆவது விபத்து இதுவென ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.